"இலங்கை உள்விவகாரங்களில் ஐ.நா. தலையிட வேண்டாம்" - அதிபர் கோட்டபய ராஜபக்ச

இலங்கையின் உள் விவகாரங்களில் ஐ.நா. சபை தலையிடக் கூடாது என அந்நாட்டு அதிபர் கோட்டபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Update: 2020-09-23 03:06 GMT
உலக நாடுகளை ஒன்றிணைக்கும் ஐக்கிய நாடுகள் சபை உருவாகி 75 ஆண்டுகள் நிறைவுற்றன. இதன் ஒருபகுதியாக நடைபெற்ற விழாவில், இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்ச காணொலி வாயிலாக பேசினார். அப்போது, தங்கள் நாட்டு உள் விவகாரங்களில் ஐநா சபை தலையிடாமல் இருப்பதையே எதிர்பார்ப்பதாக கூறினார். உலகம் பொதுவான ஒரு அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள இந்த நேரத்தில், தங்களுக்குத் தேவைப்படும் ஐக்கிய நாடுகள் சபையானது இறையாண்மை, சமத்துவம் ஆகியவற்று முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இது, ஐநா சபை உறுப்பினர்களாக உள்ள உலக நாடுகளிடையே அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்