தீ விபத்துக்கு உள்ளான எண்ணெய் கப்பல்: ஆழ்கடலுக்கு நகர்த்த நடவடிக்கை - இலங்கை கடற்படை தகவல்

தீவிபத்துக்கு உள்ளான எண்ணெய் கப்பல் முழுவதுமாக கடற்படை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளதாக இலங்கை கடற்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Update: 2020-09-05 06:21 GMT
இலங்கையில் அம்பாறை சங்கமன்கந்த இறங்குதுறைக்கு 38 கடல் மைல்களுக்கு அப்பால் உள்ள கடலில் தீப்பற்றிய நியூ டைமைன் கப்பல் 22 கடல் மைல்கள் கரை நோக்கி கொண்டு வரப்பட்டுள்ளது. கப்பலில் ஏற்பட்டுள்ள தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இலங்கை மற்றும் இந்திய அரசுகள்  ஈடுபட்டுள்ளன. அந்த கப்பலில் பயணம் செய்த 23 பேரில் 22 பேர் மீட்கப்பட்டு உள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. கப்பலில் உள்ள 2.70 லட்சம் மெட்ரிக் எரிபொருளுக்கு இதுவரை எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. தற்போதைய நிலையில் இலங்கைக்கு  எவ்வித ஆபத்தும் இல்லை எனவும், தீயை அணைக்க கரையை நோக்கி கொண்டு வரப்பட்ட கப்பலை, ஆழ்கடல் நோக்கி நகர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் கடற்படை செய்தித் தொடர்பாளர் செய்தியாளர்களிடம் பேசும் போது தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்