24 நாட்களுக்கு பிறகு புதிதாக 2 பேருக்கு கொரோனா தொற்று - நியுசிலாந்து சுகாதாரத்துறை அறிவிப்பு

நியூசிலாந்தில் கொரோனா வைரஸ் முற்றிலும் ஒழிக்கப்பட்ட நிலையில், இன்று அங்கு புதிதாக இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.;

Update: 2020-06-16 10:12 GMT
நியூசிலாந்தில் கொரோனா வைரஸ் முற்றிலும் ஒழிக்கப்பட்ட நிலையில், இன்று அங்கு புதிதாக இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நியூசிலாந்து நாட்டில் கடந்த 24 நாட்களுக்கு மேலாக புதிதாக யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்படவில்லை. கொரோனா வைரஸ் இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டு அங்கு கட்டுப்பாடு நீக்கப்பட்டு பொருளாதார நடவடிக்கை தொடங்கப்பட்டன. இந்நிலையில் அங்கு புதிதாக 2 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் இங்கிலாந்து நாட்டில் இருந்து திரும்பிய இரண்டு பெண்கள் மூலம் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக நியூசிலாந்து சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்