Chennai | Dog | சென்னையில் கடித்த நாயை அடித்த மக்கள் - கோபத்தில் சண்டை போட்ட நாய் ஆர்வலர்
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் ஐந்துக்கும் மேற்பட்டோரை கடித்த தெரு நாயை அடித்தவர்கள் மீது, நாய் ஆர்வலர் புகார் தருவதாக பேசிய வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. முன்னிராம் பாண்டியன் தெருவில் தெரு நாய் ஒன்று, சாலையில் வருவோர் போவோரை கடித்த காரணத்தால், அப்பகுதியினர் அதை தாக்கியதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து அங்கு வந்த நாய் ஆர்வலர் ஒருவர்,பொது மக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அங்குவந்த போலீசார்,மாநகராட்சி ஊழியர்கள் உதவியுடன் அதனை கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.