கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து - 3 பேர் படுகாயம்
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், கண்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் படுகாயமடைந்தனர். காரின் டயர் பஞ்சராகி கட்டுப்பாட்டை இழந்ததால், இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில், காரில் பயணம் செய்த கணவன், மனைவி உட்பட 3 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.