இன அழிப்பு குற்றவாளி, பிரான்சில் கைது - 26 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது

ருவான்டாவில் 8 லட்சம் பேர் கொல்லப்பட காரணமாக இருந்த தலைமறைவு குற்றவாளி 26 ஆண்டுகளுக்கு பின்னர் பிரான்​ஸ் நாட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.

Update: 2020-05-18 03:15 GMT
மிக அமைதியான மனிதராக தனது அண்டை வீட்டார்களால் அறியப்பட்டவர் 84 வயது பெலிசியன் கபூகா .

நேற்று காலை அந்த வயதான நபர் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பிற்குள் பிரான்ஸ் படை புகுந்து அவரை கைது செய்தது. 

இந்த வயதான மனிதனை அதிரடிப்படை ஏன் இப்படி கைது செய்கிறது என அதிர்ந்தனர் அண்டை வீட்டார்.
சற்று நேரத்தில் தொலைகாட்சிகள் சொன்ன செய்தி அவர்களை பதற செய்தது.

காரணம் இந்த 84 வயது நபர் சர்வதேச அளவில் தேடப்படும் இன அழிப்பு குற்றவாளி என்பது தான். 

1994ஆம் ஆண்டு ருவாண்டா நாட்டில் 8 லட்சம் டுட்சிஸ் இன மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். ஐநா நடத்திய விசாரனையில் இந்த இன அழிப்பை செய்யச்சொல்லி  தீவரவாத இயக்கம் ஒன்றுக்கு பெருமளவில் பணஉதவி செய்தவர் இந்த பெலிசியன் கபூகா என்பது உறுதி ஆனது. 

இந்த நிலையில் 1997ஆம் ஆண்டு ருவாண்டாவில் இருந்து தப்பிய அவர் பின்னர் எங்கிருக்கிறார் என்பது குறித்து யாருக்கும் தெரியாமல் போனது. 

தற்போது உடல் சோர்ந்து, நடை தளர்ந்த நிலையில் பிரான்ஸ் புறநகர் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் கபூகா. 90களில் இவர் ருவான்டாவில் மிகப்பெரிய தொழிலதிபர். தேயிலை தோட்டங்கள் மற்றும் ரேடியோ நிலையம் ஒன்றையும் நடத்திவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்