அமெரிக்காவில் அதிகரித்து வரும் வேலை இழப்பு - ஒரு மாதத்தில் 2.5 கோடி பேர் வேலை இழப்பு

கொரோனா ஏற்படுத்தியுள்ள பொருளாதார தாக்கம் காரணமாக அமெரிக்காவில் ஏப்ரல் மாதத்தில் மட்டும் சுமார் 2 கோடியே 50 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Update: 2020-05-09 10:32 GMT
கொரோனா வைரஸ் தொற்று அமெரிக்காவில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், தொழில் துறைகளிலும் கடும் இழப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சேவைத் துறையில் 2 கோடியே 50 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். வேலை இழப்பு விகிதம் 15 சதவீதத்தை எட்டியுள்ளது. போக்குவரத்து, சுற்றுலா மற்றும் சேவைத் துறையினர், அதிக அளவில் வேலை இழந்துள்ளனர். 2008 ஆம் ஆண்டு பொருளாதார மந்த நிலையின் போது, வேலை இழப்பு 10 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 15 சதவீதத்தை தொட உள்ளது. இதற்கு முன், 1933 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பெருமந்த நிலையில், வேலை இழப்பு 25 சதவீதமாக எட்டியதாகவும்,  அந்த நிலையை நோக்கி அமெரிக்க தொழில்துறை செல்வதாகவும் பொருளாதார நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்