சடலங்களுக்கும் கண்ணியம் கிடைக்கவில்லையா? - விசாரணைக்கு ஈக்வடார் அதிபர் உத்தரவு

ஈக்வடாரில் கொரோனா வைரசால் உயிரிழந்தோரின் உடல்கள் கண்ணியமாக கையாளப்படுகிறதா என்பது குறித்து விசாரிக்க அதிபர் லெனின் மொரேனோ உத்தரவிட்டுள்ளார்.

Update: 2020-04-09 12:57 GMT
ஈக்வடாரில் கொரோனா வைரசால் உயிரிழந்தோரின் உடல்கள் கண்ணியமாக கையாளப்படுகிறதா என்பது குறித்து விசாரிக்க அதிபர் லெனின் மொரேனோ உத்தரவிட்டுள்ளார். அங்குள்ள குவாயாகில் நகரில் நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழப்பதால் உடல்களை கையாள வழி தெரியாமல் அரசு திணறி வருகிறது. சில இடங்களில் உயிரிழந்தோரின் உடல்களை வீதிகளில் வீசும் அவலமும் நடக்கிறது. உடல்களை அடையாளம் காண முடியாததால் பாலீதீன் கவர்களில் சுற்றப்பட்டு மருத்துவமனை வளாகங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ளன. ஆரம்ப நிலையிலேயே நோயை கண்டறியாத அரசின் அலட்சியமே இந்த நிலைக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்