நெருங்கி வரும் காதலர் தினம் : ரோஜாமலர்களை வாங்க ஆர்வம் காட்டாத சீனர்கள்

காதலர் தினம் உலகம் முழுவதும் பிரபலமடைய துவங்கிய காலம் தொட்டு உச்சத்திற்கு சென்றது ரோஜாவின் தேவை...

Update: 2020-02-12 09:27 GMT
கடந்த 1990 - களுக்கு பிறகு காதலர் தினம் உலகம் முழுவதும் பிரபலமடைய துவங்கியது. இந்த காதலர் தினத்தை மையமாக வைத்து, பெரும் சந்தை ஒன்று உருவாக்கப்பட்டது. இதில் ரோஜா மலர்களின் சந்தை பிரதான இடத்தை பிடித்தது. ரோஜா மலர்களின் விற்பனை பல ஆயிரம் கோடிகளை தொட்டது. 

காதலர் தின காய்ச்சல், இந்திய இளைஞர்களையும் விட்டு வைக்கவில்லை. இதன் விளைவு, ரோஜா மலர்களுக்கான தேவை இங்கும் அதிகரிக்க துவங்கியது. 

ரோஜா உற்பத்தியில் உலக அளவில் நெதர்லாந்து முதலிடத்திலும், கொலம்பியா இரண்டாவது இடத்திலும் உள்ளது.  இந்த காதலர் தினத்திற்காக, சுமார் ஆயிரத்து 500 வகை ரோஜாக்களை, அமெரிக்கா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளுக்கு கொலம்பியா கப்பல் மூலம் ஏற்றுமதி செய்துள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்