குன்னுார்: சிம்ஸ் பூங்காவிற்கு வருகை தந்த இலங்கை முன்னாள் பிரதமர்

குன்னூர் சிம்ஸ் பூங்காவிற்கு இலங்கை முன்னாள் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே பார்வையிட்டார்.

Update: 2019-12-25 13:15 GMT
குன்னூர் சிம்ஸ் பூங்காவிற்கு இலங்கை முன்னாள் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே பார்வையிட்டார்.கடந்த சில நாட்களாக ஊட்டியில் தங்கியுள்ள இலங்கை முன்னாள் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே இன்று குன்னூர் சிம்ஸ் பூங்காவிற்கு வருகை தந்தார். சிம்ஸ் பூங்காவை சுற்றிப் பார்த்தவர் பூங்காவில் உள்ள மரங்கள் மற்றும் பூக்களின் விபரங்களை கேட்டறிந்தார்.தொடர்ந்து சாரல் மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்ததால் பூங்கா ஏரியில் படகு சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்.
இவரது வருகையை யொட்டி பூங்காவில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
Tags:    

மேலும் செய்திகள்