ராஜபக்சே தலைமையில் 16 பேர் கொண்ட அமைச்சரவை பொறுப்பேற்பு

இலங்கை பிரதமராக 3-வது முறையாக நேற்று மகிந்த ராஜபக்சே பதவியேற்றுள்ள நிலையில், 16 பேர் கொண்ட அமைச்சரவை இன்று பதவியேற்றுக்கொண்டது.

Update: 2019-11-22 11:20 GMT
இலங்கை பிரதமராக 3-வது முறையாக நேற்று மகிந்த ராஜபக்சே பதவியேற்றுள்ள நிலையில், 16 பேர் கொண்ட அமைச்சரவை இன்று பதவியேற்றுக்கொண்டது. இதில், நிதி, பாதுகாப்பு, மத விவகாரங்கள் உள்ளிட்ட துறைகளை மகிந்த ராஜபக்சே தன் வசம் வைத்துக்கொண்டார். மற்றொரு சகோதரரான சாமலுக்கு, விவசாயம், உள்நாட்டு  வணிகம், நுகர்வோர் நலன் உள்ளிட்ட துறைகள் ஓதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல முக்கிய துறைகள் ராஜபக்சே குடும்பத்தின் வசம் வந்துள்ளதாக, கூறப்படுகிறது. இந்நிலையில், ராஜபக்சேவின் அமைச்சரவையில் தமிழர்களான ஆறுமுகம் தொண்டமான், டக்ளஸ் தேவானந்தா ஆகியோரும் அமைச்சர்களாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்