இன்று ஈபிஎஸ்ஸை சந்திக்கப்போகும் முக்கிய புள்ளி - பரபரக்கும் அரசியல் களம்

Update: 2025-12-23 03:18 GMT

பசுமைவழிச் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் மதியம் ஒன்றரை மணி அளவில் நடைபெறும் இந்த சந்திப்பில், வரும் சட்டமன்றத் தேர்தல் தொடர்பான அரசியல் சூழல், கூட்டணி விவகாரங்கள், தமிழக அரசியல் நிலவரம் குறித்து அவர்கள் விவாதிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சந்திப்பின்போது, மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு எடப்பாடி பழனிசாமி மதிய உணவு அளித்து உபசரிக்க உள்ளார். இந்த சந்திப்பில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்க உள்ளனர்.

மாலை 5 மணிக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவியை சந்தித்து பேசும் அமைச்சர் பியூஷ் கோயல், தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலை குறித்து விவாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்