திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உதவி காவல் ஆய்வாளரை மிரட்டியதாக கூறி தவெக நிர்வாகிகள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆலம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட கல்லேரி பகுதியில் தவெக தெருமுனை கூட்டம் நடைபெற்றது. அப்போது காவல்துறையினருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் உதவி காவல் ஆய்வாளரை மிரட்டியதாக கூறி தவெக ஆலம்பாடி கிளை செயலாளர் நடராஜ், செயற்குழு உறுப்பினர் பிரதீப் குமார் ஆகிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.