அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் போட்ட ஆர்டர்

Update: 2025-12-23 04:02 GMT

சென்னை மெட்ரோவின் இரண்டாம் கட்ட திட்டப் பணிகளை 2026ம் ஆண்டு பிப்ரவரிக்குள் முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு அரசின் முத்திரைத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

24 துறைகளைச் சேர்ந்த 3 புள்ளி 17 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 288 முத்திரைத் திட்டங்களில் 85 திட்டங்கள் முடிந்து பயன்பாட்டில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

6 துறைகளுக்குட்பட்ட 87 ஆயிரத்து 941 கோடி ரூபாய் மதிப்பிலான 27 செயல்பாட்டுத் திட்டங்களை 2026 ஜனவரி-க்குள் முடிக்க முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

குத்தம்பாக்கம், செங்கல்பட்டு பேருந்து நிலையங்கள் மற்றும் கிளாம்பாக்கம் வான்வழி நடைபாதை பணிகளும் விரைவுபடுத்தப்பட வேண்டும் என கூறப்பட்டது.

பூந்தமல்லி முதல் வடபழனி வரையிலான சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகளை 2026 பிப்ரவரி -க்குள் முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்