அண்மைகாலமாக ஆன்லைன் மூலம் கொள்ளையடிக்க சைபர் கிரைம் குற்றவாளிகள் பல உத்திகளை கையாண்டு வருகின்றனர். போலீஸ் அதிகாரிகள் போல் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் முதியவரை குறிவைத்து பல லட்சம் ரூபாய் பறிக்கின்றனர். தனிமையில் இருக்கும் இவர்கள் செல்போனில் வரும் லிங்குகளை தொட்டு கொள்ளையர்கள் பிடியில் சிக்கி கொள்கின்றனர் என காவல்துறை தெரிவித்துள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் பற்றிய தெளிவின்மை, கௌரவத்தால் ஏமாந்ததை வெளியில் சொல்வதில் பயம் போன்ற காரணங்களால் இவர்களை சைபர் குற்றவாளிகள் குறி வைப்பதாக போலீசார் கூறுகின்றனர். சட்டவிரோத செயலில் உங்களது நம்பர் உள்ளது என்று கூறியே பலர் முதியவர்களை ஏமாற்றுவதாகவும் காவல்துறை கூறுகிறது.