மதுரை அண்ணா நகர் பகுதியில் ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாக சாலையில் பீய்ச்சி அடித்தது.
வேலு நாச்சியார் பாலத்தின் ரவுண்டான அருகே மெயின் ரோட்டில், ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. நள்ளிரவில் திடீரென உடைப்பு ஏற்பட்டு சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக குடிநீர் வீணாக வெளியேறியது. பின்னர் தகவலறிந்து வந்த மாநகராட்சி ஊழியர்கள் வால்வை திருப்பி இரண்டரை மணி நேரத்திற்கு பின் உடைப்பை சரி செய்தனர். அதிக அழுத்தம் காரணமாக பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.