Nurse Protest | Police | ``கொஞ்சம் கூட இரக்கம் இல்லாம தரதரன்னு இழுத்துட்டு போறாங்க'' - அதிர்ச்சியுடன் சொன்ன செவிலியர்கள்
சென்னை அடுத்த கூடுவாஞ்சேரியில், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 6-ஆவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. கைது செய்யப்பட்ட செவிலியர்களை போலீசார், படப்பை மற்றும் குன்றத்தூர் பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்களில் அடைத்தனர்.