Today Headlines | மதியம் 2 மணி தலைப்புச் செய்திகள் (23.12.2025) | 2 PM Headlines | ThanthiTV

Update: 2025-12-23 08:58 GMT
  • சென்னை வந்துள்ள பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியுஷ் கோயல் தலைமையில், பாஜக மையக்குழு கூட்டம் நடைபெற்றது.. கமலாலயத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது...
  • சட்டப்பேரவை தேர்தல் நிர்வாகிகளுடன், முதலமைச்சர் ஸ்டாலின் ஒன் டூ ஒன் ஆலோசனை நடத்தினார்... அண்ணா அறிவாலயத்தில் நடந்த இந்த ஆலோசனையில் நன்னிலம், மயிலாடுதுறை, பூம்புகார் தொகுதி நிர்வாகிகள் பங்கேற்றனர்...
  • சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலினை, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் சந்தித்து பேசினார்.. மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியதாக, சிதம்பரம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது...
  • பொங்கல் பண்டிகையொட்டி ஜனவரி ஆறாம் தேதிக்குள் குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச வேட்டி சேலை வழங்கப்படும் என அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்... அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பும் பணி விரைவில் தொடங்கும் என்றும் அவர் கூறினார்...
  • தைலாபுரத்தில் மாவட்ட செயலாளர்களுடன் பாமக நிறுவனர் ராமதாஸ் ஆலோசனை மேற்கொண்டார்... வரும் 29ஆம் தேதி பொதுக்குழு கூட உள்ள நிலையில், தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது...
Tags:    

மேலும் செய்திகள்