Villupuram | பிளஸ் 2 மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை? - பரபரப்பு புகார்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் 12-ஆம் வகுப்பு மாணவியை இளைஞர் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மாணவியை மிரட்டி இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று, சிறுவாடி காப்புக்காடு வனப்பகுதியில் சாரதி என்ற 19 வயது இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு அவரது நண்பர்களான தாமரை மற்றும் ஒரு சிறுவன் உள்பட 3 பேர் உடந்தையாக இருந்ததாகவும் தெரிகிறது. இதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.