டிபி சத்திரத்தில் உள்ள ஜோதியம்மாள் நகரில் 50 ஆண்டுகளாக வசித்து வந்த இவரது வீட்டின் அருகே
குடிசை மாற்றுவாரியம் சார்பில் குடியிருப்புகள் கட்டப்பட்டன. அப்போது இவரது வீடு அருகாமையில் இருந்ததால் வீட்டை காலி செய்து அருகே தங்குமாறும், பணி முடிந்த பிறகு
குடியிருப்பு ஒதுக்கி தருவதாகவும்
அதிகாரிகள் உறுதியளித்தாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது வீடும் ஒதுக்கவில்லை, தங்கியிருந்த வீட்டுக்கு செல்லமுடியாமல் தடுப்புகள் அமைக்கப்பட்டதாக ரஜினி வேலு புகார் அளித்துள்ளார். வீட்டை விட்டு வெளியேறுமாறு அதிகாரிகள் தொந்தரவு கொடுப்பதாகவும் மாநகராட்சி அதிகாரிகளிடம் அவர் தெரிவித்துள்ளார்.