இளைஞர்களை துரத்தி துரத்தி கத்தியால் வெட்டிய கும்பல் - கொடூர CCTV காட்சி
திருவள்ளூர் ஈக்காடு மேம்பாலம் அருகே முன்விரோதம் காரணமாக இளைஞர்கள் சிலரை ஒரு கும்பல் கத்தியால் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. ஈக்காடு பகுதியை சேர்ந்தவர் உதயக்குமார். இவர் தனது நண்பர்களுடன் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது ஒரு கும்பல் உதயக்குமாரையும் அவரது நண்பர்களையும் சரமாரியாக கத்தியால் தாக்கிவிட்டு தப்பியோடியது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.