கைம்பெண்கள் வன்கொடுமைக்கு எதிராக தனி சட்டம் இயற்ற வேண்டும் என கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது. இந்த சங்க நிர்வாகிகள் சார்பில் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய அவர்கள், கைம்பெண்களுக்கு ஓய்வூதியம், கடன் வசதி மறுக்கப்படுவதால் பொருளாதார சிக்கல்கள் ஏற்படுவதாக குறிப்பிட்டனர். மேலும், கைம்பெண்களுக்கான உதவித்தொகையை 6 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கிடவும், அவர்களுக்கு தனி ஹோம் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.