ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணம் அம்பாத்தோட்டை துறைமுகம் : மகிந்த ராஜபக்சே ஆதரவாளர் புதிய தகவல்

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கியதற்கும், ஈஸ்டர் தாக்குதலுக்கும் தொடர்பு இருப்பதாக இலங்கை எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்சேவுக்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Update: 2019-07-09 06:51 GMT
அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கியதற்கும், ஈஸ்டர் தாக்குதலுக்கும் தொடர்பு இருப்பதாக இலங்கை எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்சேவுக்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்புவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் இதனை தெரிவித்தார். இதுதொடர்பாக யாரும் விவாதிக்க முன்வரவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டி உள்ளார். அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கிய போது, இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் போன்ற நாடுகள் எச்சரித்ததையும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார். அரசியல் மற்றும் பூகோள ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக அம்பாந்தோட்டை உள்ளதால் சீனாவை தொடர்ந்து இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் இங்கு கால்பதிக்க முயற்சி செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்