மத்திய கிழக்கு நாடுகளில் இன்று ரமலான் பண்டிகை

சவுதி அரேபியா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளின் ரமலான் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது

Update: 2019-06-04 01:38 GMT
சவுதி அரேபியா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளின் ரமலான் பண்டிகை இன்று  கொண்டாடப்படுகிறது. ஐம்பெருங் கடமைகளில் ஒன்றான நோன்பை இஸ்லாமியர்கள் மேற்கொண்ட நிலையில், பிறை தென்பட்டதால், இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்காவில் சிறப்பு தொழுகை நடைபெற உள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படுவதால், இந்தியாவில் புதன்கிழமை ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்