ஐ.நா. உதவி பொதுச்செயலாளராக இந்திய வம்சாவளி பெண்

ஐ.நா. உதவி பொதுச்செயலாளராக இந்தியாவை சேர்ந்த அனிதா பாட்டியா என்ற பெண்மணி நியமிக்கப்பட்டுள்ளார்.

Update: 2019-06-01 08:03 GMT
ஐ.நா. உதவி பொதுச்செயலாளராக இந்தியாவை சேர்ந்த அனிதா பாட்டியா என்ற பெண்மணி நியமிக்கப்பட்டுள்ளார். ஆற்றல் மேலாண்மை, நிலைத்தன்மை, கூட்டு ஆகியவற்றுக்கான உதவி பொதுச்செயலாளராக அவர் செயல்படுவார் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் குட்டரஸ் அறிவித்துள்ளார். கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் பி.ஏ. பட்டம் பெற்ற இவர், அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் எம்.ஏ. முதுநிலை பட்டமும், பின்னர் ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பில் டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார். இவர் உலக வங்கியில் பல்வேறு தலைமைப் பதவிகளை வகித்து அனுபவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

மேலும் செய்திகள்