காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த பாகிஸ்தானியர்கள்

இலங்கை தாக்குதல் சம்பவத்தை அடுத்து நீர்கொழும்புவில் ஆங்காங்கே தங்கி இருந்த பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானை சேர்ந்த 160க்கும் மேற்பட்டவர்கள் அங்குள்ள காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.;

Update: 2019-05-04 19:01 GMT
இலங்கை தாக்குதல் சம்பவத்தை அடுத்து நீர்கொழும்புவில் ஆங்காங்கே தங்கி இருந்த பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானை சேர்ந்த 160க்கும் மேற்பட்டவர்கள் அங்குள்ள காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். இந்நிலையில் தாங்கள் தங்குவதற்கு இடம் வழங்கப்படவில்லை என்றும் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குமுறுகின்றனர். மேலும் சிறுவர்கள் உட்பட பலர் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதால் தாங்கள் தங்குவதற்கு பாதுகாப்பான ஒரு இடம் ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்