"குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்த 8 ஆண்டுகள் திட்டம்?" - முன்னாள் ராணுவத் தளபதியான சரத் பொன்சேகா

குண்டு வெடிப்பை தொடர்ந்து இலங்கை நாடாளுமன்றத்தில் அவசர காலச் சட்டத்தை நீடிப்பதற்கான யோசனை மீதான விவாதம் நடைபெற்றது.

Update: 2019-04-24 22:29 GMT
குண்டு வெடிப்பை தொடர்ந்து இலங்கை நாடாளுமன்றத்தில் அவசர காலச் சட்டத்தை நீடிப்பதற்கான யோசனை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய முன்னாள் ராணுவத் தளபதியான சரத் பொன்சேகா, தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல்களுக்கு 8 ஆண்டுகள் வரை திட்டமிடப்பட்டிருக்கலாம் என தெரிவித்தார். குண்டு வெடிப்பு நிகழ வாப்புள்ளதாக வெளிநாட்டு உளவுப் பிரிவுகள் தகவல் கொடுத்த உடனேயே, இலங்கை அரசு பாதுகாப்பு சபையை கூட்டியிருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். உள்நாட்டு போர் முடிவுக்கு வந்த பிறகு, ஆட்சியை பிடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்திய நாம், சர்வதேச ரீதியில் உள்ள அச்சுறுத்தல்களை கவனத்தில் கொள்ளவில்லை என்றும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்