2030 வரை அல் சிசியை அதிபராக அமர வைக்கும் சட்ட திருத்தம் : பொது வாக்கெடுப்பு தொடக்கம்

எகிப்து அதிபர் அப்துல் ஃபதா அல்-சீசீ, 2030 வரை பதவியில் நீடிக்க வழி வகை செய்யும் சட்ட திருத்தங்களுக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியதை அடுத்து, சட்ட திருத்தத்தை அமல்படுத்த பொது வாக்கெடுப்பு அந்நாட்டில் தொடங்கியது.

Update: 2019-04-20 14:46 GMT
எகிப்து அதிபர் அப்துல் ஃபதா அல்-சீசீ, 2030 வரை பதவியில் நீடிக்க வழி வகை செய்யும் சட்ட திருத்தங்களுக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியதை அடுத்து, சட்ட திருத்தத்தை அமல்படுத்த பொது வாக்கெடுப்பு அந்நாட்டில் தொடங்கியது. எகிப்து அதிபர் அல் சிசியின் 2வது, நான்காண்டு பதவிக்காலம் 2022ஆம் ஆண்டில் முடிவடைகிறது. தற்போது ஏற்பட்டிருக்கும் இந்த சட்டத் திருத்தம் மூலம், அவரது பதவிக் காலத்தை ஆறு ஆண்டு காலமாக நீட்டிப்பதோடு, மூன்றாவது முறையாக போட்டியிடவும் வழிவகை செய்கிறது. இதனால், 2030 வரை அவர் அதிபராக பதவி வகிக்க முடியும். எகிப்தில் வளர்ச்சி திட்டங்களையும், சீர்திருத்தங்களையும் கொண்டு வர இந்த கால அவகாசம் அதிபர் அல் சிசிக்கு தேவை என அவரின் ஆதரவாளர்கள் கூறும் அதே வேளையில் இந்த மாற்றங்கள் அவசரம் அவசரமாக அமல்படுத்தப்படுவதாக அவரின் எதிர்ப்பாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த 2014 முதல் அதிபராக இருந்து வரும் அதிபர் அல்சிசி, கடந்த ஆண்டு மிக பெரும்பான்மையோடு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

மேலும் செய்திகள்