"இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தீர்வுக்காண அயல்நாடுகளின் தலையீடு அவசியமில்லை" - அதிபர் மைத்திரிபால சிறிசேன

இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தீர்வுக்காண அயல்நாடுகளின் தலையீடு அவசியமில்லை என்று அந்நாட்டு அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Update: 2018-09-26 17:03 GMT
நியூயார்க்கில், ஐ.நா. பொதுச் சபையின் 73-வது அமர்வு கூட்டத்தில் உரையாற்றிய மைத்திரிபால சிறிசேன, இலங்கை பிரச்சினையை உள்நாட்டுக்குள்ளேயே பேசி தீர்த்துக் கொள்ள இடமளிக்க வேண்டும் 
என பன்னாட்டு சமூகத்துக்கு  வேண்டுகோள் விடுத்தார். கடந்த மூன்றரை ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள பல்வேறு மாற்றங்களை பட்டியலிட்ட மைத்திரிபால சிறிசேன,  இலங்கையில் மனித உரிமை, ஊடகச் சுதந்திரம்,  ஜனநாயம் மற்றும் மக்களின் சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.  இலங்கையில், மனித உரிமைகளை நிலைநாட்ட எடுக்கும் நடவடிக்கைகளுக்கு, உலக நாடுகள் ஆதரவளிக்க வேண்டும் என
மைத்ரிபால சிறிசேனா கேட்டுக்கொண்டார்.
Tags:    

மேலும் செய்திகள்