தீவிரவாதத்தை அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : பாகிஸ்தானுக்கு இந்தியா - அமெரிக்கா வலியுறுத்தல்

இந்திய - அமெரிக்க பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் இடையே டெல்லியில் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.

Update: 2018-09-07 02:38 GMT
மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், சுஷ்மா சுவராஜ் மற்றும் அமெரிக்க அமைச்சர்கள் மைக் பாம்பியோ, ஜின் மேட்டீஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதன் பின்னர் இரு நாடுகள் இடையே தகவல் தொழில்நுட்பம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

இதனையடுத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அமைச்சர்கள் குழு, பிரதமர் மோடியை சந்தித்தது. இதனையடுத்து, இரு நாடுகளின் தரப்பில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் பாகிஸ்தான் மண்ணில் பயங்கரவாதத்தை அழிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 

மேலும், மும்பை தாக்குதல் பதன்கோட் விமானப்படை தள தாக்குதல் உரி தாக்குதலில் தொடர்புடையவர்கள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்