உலக 'லம்பர் ஜக்' சாம்பியன் ஷிப் போட்டி - மரக்கட்டைகளில் 21 வகையான விளையாட்டுகள்

அமெரிக்காவில் 'லம்பர் ஜக்' என்ற பெயரில் மரக்கட்டைகளை கொண்டு நடத்தப்படும் 21 வகையான விளையாட்டுகளில் வீரர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

Update: 2018-07-23 10:36 GMT
அமெரிக்காவில் 'லம்பர் ஜக்' என்ற பெயரில் மரக்கட்டைகளை கொண்டு நடத்தப்படும் 21 வகையான விளையாட்டுகளில் வீரர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர். விஸ்கான்சின் மாகாணத்தில் கடந்த 18 ஆம் தேதி தொடங்கி, தொடர்ந்து 3 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் 200 க்கு மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். ஆண்கள், பெண்கள் என அனைத்து  பிரிவினரும் கலந்து கொண்ட இந்த விளையாட்டில், "லாக் ரோலிங்", மரத் துண்டுகளை வெட்டுதல், மரக்கட்டைகள் மீது ஓடுதல் என பல்வேறு விதமான விளையாட்டுகள் நடைபெற்றன. 
Tags:    

மேலும் செய்திகள்