அமெரிக்கா வனப்பகுதியில் பரவும் காட்டுத்தீ - தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை
சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் அங்கிருந்த மரம், செடி, கொடிகள் தீயில் கருகின.;
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் இர்வின்டேல் பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிகிறது. இதில், சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் அங்கிருந்த மரம், செடி, கொடிகள் தீயில் கருகின. தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, சுற்றுப்பகுதிகளில் உள்ள செடி கொடிகளை அகற்றும் பணியில் பொக்லைன் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ரயில் தண்டவாளம் அருகே தீ பரவியதால், அதனை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்காவில் இந்த ஆண்டு 33 லட்சம் வனப்பரப்பளவு காட்டுத்தீயால் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.