மன்னிப்பு கேட்டு மறுபடியும் ஆட்டத்தை ஆரம்பித்த இர்பான் - அடுத்த சர்ச்சை

Update: 2024-05-23 16:42 GMT

தனக்கு பிறக்கப் போகும் குழந்தையின் பாலினத்தை அறியும் ஆர்வ மிகுதியில், மனைவியை துபாய் அழைத்துச் சென்ற இர்பான், கருவில் இருக்கும் சிசு ஆணா? பெண்ணா? என்பதை அறிந்து, சிசுவின் பாலினத்தை அறிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து, இர்பானிடம் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில், தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்ட இர்பான், சிசுக் கலைப்பு தொடர்பாக விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிடுவதாகவும் உறுதி தெரிவித்திருந்தார். உறுதி தெரிவித்த பிறகும், சிசு கலைப்பு குறித்தான விழிப்புணர்வு வீடியோவை வெளியிடாமல், வழக்கம்போல் சாலையோர கடையில் பிரியாணி சாப்பிடுவதும், தன் உறவினர் குழந்தைகளை சலூன் அழைத்துச் செல்வதுமான வீடியோக்களை இர்பான் யூடியூபில் வெளியிட்டு வருவது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்