மனைவியுடன் அந்த மாதிரி உறவு..கண்டித்த கணவருக்கு விழுந்த வெட்டு...சேலத்தில் பயங்கர சம்பவம் | Salem
தலைவாசல் அருகே வீரகனூர் பகுதியை சேர்ந்த செல்வம் என்பவரின் மனைவி சத்தியா, செல்வராஜ் என்பவரின் பேன்சி ஸ்டோரில் வேலை செய்து வந்தார். நாளைடைவில், சத்தியாவுக்கும், செல்வராஜிக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டு நெருக்கமாக பழகியுள்ளனர். இந்த விவகாரம் சத்தியாவின் கணவர் செல்வத்திற்கு தெரியவரவே, ஆத்திரமடைந்த அவர் செல்வராஜை கண்டித்துள்ளார். இதில் கோபமடைந்த செல்வராஜ் திட்டம் தீட்டிய நிலையில், வீரகனூர் பேருந்து நிலையம் அருகே உள்ள கடையில் நின்று கொண்டிருந்த செல்வத்தை, மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த செல்வம், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலையாளி செல்வராஜ், அரிவாளுடன் காவல்நிலையத்தில் சரண் அடைந்ததால், அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.