ஆட்டின் பச்சை ரத்தம் குடித்த சாமியாடி சுருண்டு விழுந்து பலி.. கோயில் கொடையில் சோகம்

Update: 2024-05-23 05:50 GMT

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருகே கோயில் திருவிழாவில் ஆட்டின் ரத்தத்தை குடித்த பூசாரி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. செட்டியாம்பாளையத்தில் கிராமத்தில் உள்ள அண்ணமார் கோயிலில் பரண் கிடாய் பூஜை நடைபெற்றது. பக்தர்கள் கிடாய்களை பலியிட வழக்கம்போல் 5 பூசாரிகள் ஆட்டின் ரத்ததை குடித்தும், ரத்தத்தை வாழைப்பழத்துடன் பிசைந்து சாப்பிட்டுள்ளனர். இதில், பழனிச்சாமி என்ற பூசாரிக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், பழனிச்சாமி பரிதாபமாக உயிரிழந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்