பிரபல யூடியுபர் "ஆங்கிரி ரான்ட்மேன்" அகால மரணம்

Update: 2024-04-18 02:00 GMT

பிரபல யூடியுபர் "ஆங்கிரி ரான்ட்மேன்" அகால மரணம்

#youtuber #india #reviewer #thanthitv

"ஆங்கிரி ரான்ட்மேன்" என்ற பெயரில் பிரபல யூடியுபராக வலம் வந்தவர் அப்ரதீப் சாஹா. கால்பந்து விளையாட்டின் தீவிர ரசிகரான இவர், ஃபுட் பால் மற்றும் கிரிக்கெட் போன்ற விளையாட்டுகள் குறித்து பேசி யூடியுப்பில் வீடியோ பதிவிட்டு வந்தார். இந்நிலையில், சினிமா திரைப்படங்கள் குறித்தான தனது விமர்சனங்களை உரத்த சத்தத்துடன் கூடிய குரலில் பேசி... இவர் வெளியிட்ட வீடியோக்கள் இணையத்தில் வைரலானது. அண்மையில் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் குறித்தும் அப்ரதீப் சாஹா பேசி வீடியோ வெளியிட்டிருந்த நிலையில், கடந்த மாதம் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல் உறுப்புகள் செயலிழப்பு, இதயம் தொடர்பான பிரச்சினைகள் என தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அப்ரதீப் சாஹா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது

Tags:    

மேலும் செய்திகள்