TNPSC நேர்முகத்தேர்வில் பாகுபாடு - பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டு

Update: 2024-05-25 13:30 GMT

டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் தேர்வுகளில் நேர்முகத் தேர்வு முறையை அரசு ரத்துசெய்ய வேண்டுமென, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், தமிழக அரசின் வேளாண்துறை பணிகளுக்கான தேர்வில், நேர்முகத்தேர்வு மதிப்பெண் வழங்குவதில் பாகுபாடு காட்டப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த நேர்முகத் தேர்வுகளின் போது செய்யப்பட்ட காணொலி பதிவுகளை பொதுமக்களின் பார்வைக்கு வெளியில் விட வேண்டும் என்றும், தேர்வர்களின் நம்பிக்கையை பெற அனைத்து பணிகளுக்கும் நேர்முகத் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்