"அதிமுக உடன் கைகோர்த்தோமா..? நாங்கள் அவர்களை.." உடைத்து பேசிய CM ஸ்டாலின்

Update: 2024-04-01 14:06 GMT

எங்கள் கொள்கைக்கு நேர் எதிராக செயல்படும் அதிமுக உடன் கைகோர்த்து செயல்படுவதாக தவறான குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்த முதலமைச்சர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக-வை நாங்கள் திராவிடக் கட்சியாக நினைப்பது இல்லை என்றும் அவர்களுக்கும் திராவிடக் கொள்கைக்கும் தொடர்பு இல்லை எனவும் கூறியுள்ளார். பாஜகவிலும் நிறைய வாரிசுகள் அரசியலுக்கு வந்துள்ளார்கள் எனக் கூறிய முதலமைச்சர், அவர்கள் யாரையாவது பிரதமர் மோடிக்கு பிடிக்கவில்லையா? எனக் கேட்டார். மீண்டும் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்தால் இந்தியாவில் ஜனநாயகம் இருக்காது என தெரிவித்த அவர், மோடி எதிர்ப்பு சிந்தனை என்பது தென் மாநிலங்கள் போலவே இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் விதைக்கப்பட்டு விட்டதாக தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்