கோவையில் பூங்கா சறுக்கில் விளையாடிய குழந்தைகள் பலி.. சிகிச்சையளிக்கும் போது வெளிவந்த அதிர்ச்சி உண்மை

Update: 2024-05-24 02:41 GMT

சின்னவேடம்பட்டி துடியலூர் ரோடு ராமன்விஹார் பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கும் பிரசாந்த் ரெட்டியின் மகன் ஜியான்ஸ் ரெட்டி, பாலசந்தரின் மகள் வியோமா பிரியா ஆகிய இருவரும் நேற்று மாலை 6 மணி அளவில் பூங்காவில் இருந்த சறுக்கலில் விளையாடிக் கொண்டிருந்தபோது, இருவரும் திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்தனர்.

இதுகுறித்து குழந்தைகளின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. குழந்தைகளை மீட்ட பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தைகள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

குழந்தைகள் விளையாடிய சறுக்கு அருகில் உள்ள மின்கம்பத்தில் இருந்து மின்கசிவு ஏற்பட்டு குழந்தைகளை மின்சாரம் தாக்கி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக அங்கிருந்த மின்சார வயர்கள் சேதப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளதாகவும், குடியிருப்பு தலைவரின் அலட்சியத்தால் இந்த விபத்து நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்