மின் வயர்களே இல்லாமல் சறுக்கில் கரண்ட் பாய்ந்தது எப்படி? - கோவை குழந்தைகள் மரணம்.. அதிர்ச்சி காரணம்

Update: 2024-05-25 03:09 GMT

கோவையில் மின்சாரம் தாக்கி இரண்டு குழந்தைகள் உயிரிழந்த பூங்காவிற்குள் குழந்தைகள் செல்வதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை சரவணம்பட்டி ராணுவ வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகத்தில் உள்ள பூங்காவில் மின்சாரம் தாக்கி 2 குழந்தைகள் உயிரிழந்தனர். இதையடுத்து, மின்வாரிய அதிகாரிகள் அந்த பூங்காவுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தபோது, பூங்காவில் விதி மீறல்கள் இருப்பது தெரியவந்தது. அந்த பூங்காவில் 3 மாதங்களுக்கு முன்பு புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, புதிய சறுக்கு விளையாட்டு உபகரணங்களை அமைத்துள்ளனர். ஏற்கெனவே பூங்காவுக்குள் பூமிக்கு அடியில் மின்சார வயர்கள் பதிக்கப்பட்டிருந்த நிலையில், அதன் மீது சறுக்கு விளையாட்டுக்கான கம்பிகளை நட்டதால், மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மின்வாரிய விதிகளை முறையாக அமல்படுத்தாத குடியிருப்போர் சங்க நிர்வாகம் மீது மின்சாரத் துறை சார்பில் காவல் துறையில் புகார் அளிக்கப்பட உள்ளது. பூங்காவுக்குள் குழந்தைகள் விளையாடுவதற்கு தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்