பூங்காவில் மின்சாரம் தாக்கி சிறுவர்கள் பலியான விவகாரம்.. காவல் ஆணையர் சொன்ன தகவல்

Update: 2024-05-25 16:58 GMT

கோவையில் காவலர்கள் மற்றும் காவலர் குடும்பத்தினருக்கான மருத்துவ முகாமை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்து பேசினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், சின்னவேடம்பட்டி ராணுவ குடியிருப்பில் மின்சாரம் தாக்கி சிறுவர்கள் உயிரிழந்த வழக்கை விபத்து வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருவதாகவும், மின்வாரியத்தில் உரிய அனுமதியில்லாமல் பூங்கா அடியில் மின் இணைப்பு கொண்டு வந்திருப்பதாகவும், சம்பந்தப்பட்ட நபர்கள் மீதும் ஒப்பந்ததாரர் மீதும் புலன் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்