3 திருமணம் செய்தும் அடங்காத நபர்.. பெண்கள் வலையில் சரியாக சிக்கிய சுதாகர்.. இறுதியில் மிஞ்சிய அடி

Update: 2024-05-26 11:30 GMT

செங்கல்பட்டு மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்தவர் சுதாகர். 3 பெண்களை அடுத்தடுத்து திருமணம் செய்து ஏமாற்றிய இவர், மேலும் பல பெண்களுக்கு காதல் வலை விரித்து வந்ததாக கூறப்படுகிறது. இதில், சுகாதாகர் மீது பல திருட்டு வழக்குகளும் காவல்நிலையங்களில் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் நாகலத்து மேடு பகுதியில் உள்ள தனது சகோதரி வீட்டில் தங்கி இருந்த சுதாகர், அருகிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரியும் பெண்கள் மூவரை நோட்டமிட்டிருக்கிறார். மாடியில் தூங்குவதை அப்பெண்கள் வழக்கமாக கொண்டிருந்த நிலையில், இதையறிந்த சுதாகர் நள்ளிரவில் மாடிக்குள் நுழைந்து பெண்களின் செல்போனை திருடிச் சென்றிருக்கிறார். காலையில் செல்போன் திருடு போனதையறிந்து அதிர்ச்சியடைந்த பெண்கள், திருடுபோன செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியபோது, அவர்களிடம் ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் சுதாகர் பேசியது பெண்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. ஒரு கட்டத்தில் சுதாகரின் வழியிலே சென்று அவரை பிடிக்க திட்டம் தீட்டிய பெண்கள், சுதாகர் பாணியிலே செல்போனில் பதிலுக்கு பேசி வலை விரித்திருக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்