புதிய சாதனை படைத்த இஸ்ரோ | ISRO

Update: 2024-04-26 05:58 GMT

நெல்லை மாவட்டம், மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் ராக்கெட் விண்ணில் செலுத்துவதற்குரிய பி.எஸ்.4 எஞ்சின் சோதனை வெற்றி அடைந்ததாக இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ மையத்திலிருந்து விண்ணில் விண்கலம் செலுத்துவதற்கு தேவையான கிரையோஜெனிக் எஞ்ஜின், விகாஷ் எஞ்ஜின்கள், பி.எஸ்.4 எஞ்ஜின் தயாரிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பி.எஸ்.எல்.வி ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான பி.எஸ்.4 எஞ்சின் பரிசோதனை வியாழக்கியமை நடைபெற்றது. 665 வினாடிகளில் இலக்கை அடைந்து, சோதனை வெற்றி பெற்றதாக இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்