இந்தியா VS பாகிஸ்தான்.. `X' தளத்தில் மோதிக்கொள்ளும் முக்கிய புள்ளிகள் | Pakistan | Thanthitv

Update: 2024-05-25 17:11 GMT

டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் இன்று காலை

வாக்களித்தார். இதைப் பற்றிய அவர் இட்டிருந்த எக்ஸ்

தள பதிவை பகிர்ந்துள்ள பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர்

ஃபாவத் ஹுசைன், வெறுப்பு அரசியலை, அமைதியும்,

நல்லிணக்கமும் வெல்லட்டும் என்று ட்வீட் செய்திருந்தார்.

இதற்கு எதிர்வினையாற்றிய கெஜ்ரிவால், உங்களின் ட்வீட்

தேவையற்றது என்றும், நானும், எங்கள் நாட்டு மக்களும்,

எங்களின் பிரச்சனைகளை சமாளித்து கொள்வோம் என்று

கூறியிருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்