"முருகனுக்கு அரோகரா" - களைகட்டும் காவடி திருவிழா

Update: 2024-05-26 10:20 GMT

ஒசூர் அருகே உள்ள சூடசந்திரம் ஆதிபராசக்தி அங்காள பரமேஸ்வரி தேவி கோயில் தீமிதி திருவிழாவில் ஏராளமானோர் பங்கேற்று நேர்த்திக் கடன் செலுத்தினர். ஆதிசக்தி , கங்கம்மாதேவி, முனீஸ்வர ஸ்வாமி உள்ளிட்ட கிராமதெய்வங்களை தோள்களில் சுமந்தவாறு பக்தர்கள் அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்தனர்.

சிவகாசியில் குழந்தை வேலன் காவடி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. மேளதாளத்துடன் முத்தாலம்மன் கோயிலில் இருந்து தொடங்கிய காவடி ஊர்வலம் திருத்தங்கல் முருகன் கோயிலில் முடிவடைந்தது. ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும் பால்குடம் சுமந்தும் "முருகனுக்கு அரோகரா" என்ற கோஷத்துடன் நடைபயணம் மேற்கொண்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பாலாற்றங்கரையில் அமைந்துள்ள ஆயிரத்து 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரதராஜ பெருமாள் ஆலயத்தில் திருத்தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. வரதராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்துடன் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கரூர் மாவட்டம் மேலப்பட்டி பெரியகாண்டியம்மன், மாறப்ப சுவாமி ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீர் மக்கள இசை முழங்க கோவில் கலசங்களில் ஊற்றப்பட்டது. கோவிலை சுற்றி திரளாக கலந்து கொண்ட பக்தர்களுக்கு புனித நீர் ட்ரோன் மூலம் தெளிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்