20 அரசு பஸ் பயணிகளுக்கு நேர்ந்த கதி - சேலம் NH-ல் பரபரப்பு

Update: 2023-08-05 07:48 GMT

20 அரசு பஸ் பயணிகளுக்கு நேர்ந்த கதி - சேலம் NH-ல் பரபரப்பு

சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் அருகே, லாரி மோதியதில் சாலையோர பள்ளத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்து மீது லாரி மோதியது. இதில் சாலையோர பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்ததில், 20 பயணிகள் காயமடைந்தனர். பலத்த மழைக்கிடையே, காயமடைந்தவர்களை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தகவல் அறிந்த நெடுஞ்சாலைதுறைனர் மற்றும் போலீசார், விபத்து குறித்து விசாரணை நடத்தினர். விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்