10 வயது சிறுமியை கடித்து குதறிய நாய்..!கண்ணீர் விட்டு கதறும் தந்தை..கோவையில் அதிர்ச்சி சம்பவம்

Update: 2024-05-24 02:07 GMT

கோவை சூலூர் அருகே பக்கத்து வீட்டு வளர்ப்பு நாய் கடித்து 10 வயது சிறுமி படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பாப்பம்பட்டி பகுதியை சேர்ந்த அக்ஷயா கீர்த்தி என்ற 5-ம் வகுப்பு மாணவி உறவினர் வீட்டுக்கு சென்ற போது பக்கத்து வீட்டில் கட்டப்படாமல் இருந்த வளர்ப்பு நாய்

சிறுமியை துரத்தி சென்று கடித்துள்ளது.

கழுத்து,தோள்பட்டை காது என பல இடங்களில்

நாய் கடித்து குதறியதால் படுகாயமடைந்த சிறுமி அக்ஷயா கீர்த்தி சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அச்சிறுமியை ஏற்கனவே அதே நாய் கடித்துள்ளதாகவும், இது குறித்து நாய் உரிமையாளரிடம் கூறியும் அவர் அலட்சியமாக

நாயை கட்டி வைக்காமல் இருப்பதாகவும்

சிறுமியின் தந்தை புகார் தெரிவித்துள்ளார்.   

Tags:    

மேலும் செய்திகள்