நள்ளிரவில் திமுக பிரமுகரை முகம்..சிதைத்து வெட்டி கொன்ற மர்ம கும்பல் - திண்டுக்கலில் பயங்கரம்

Update: 2024-05-24 02:39 GMT

திண்டுக்கல்லில் திமுக பிரமுகரும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் கணவருமான மாயாண்டி ஜோசப், அடையாளம் தெரியாத மர்ம நம்பர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.யாகப்பன்பட்டியைச் சேர்ந்த திமுக பிரமுகர், அதே ஊரில் பல ஆண்டுகளாக டாஸ்மாக் பார் நடத்தி வந்தார். இவருடைய மனைவியும், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவருமான நிர்மலா, சில ஆண்டுகளுக்கு முன் உடல்நலக்குறைவால் இறந்து விட்ட நிலையில், வேடப்பட்டியில் தனியாக வசித்து வந்தார். நேற்றிரவு டாஸ்மாக் பாரில் இருந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியபோது, எதிர்த்திசையில் பைக்கில் வந்த ஒரு கும்பல், மோதி கீழே தள்ளி விட்டு, சரமாரியாக வெட்டி சிதைத்துக் விட்டு தப்பிச் சென்றது. தகவலறிந்து வந்த திண்டுக்கல் தாலுகா போலீசார், மாயாண்டிஜோசபின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாயாண்டி ஜோசப் மீது சில வழக்குகள் நிலுவையில் இருப்பதால் முன்பகை காரணமாக இந்த கொலை நடைபெற்றதா என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்