பெண்ணை லாக்கரில் வைத்து பூட்டிய வங்கி..! அதிர வைத்த விவகாரம்... கண் சிவந்த கோர்ட் அதிரடி உத்தரவு

Update: 2024-04-27 14:24 GMT

வங்கி லாக்கரில் வைத்து பெண் வாடிக்கையாளரை பூட்டிய விவகாரத்தில், தனியார் வங்கி 25 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தாம்பரம் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் மஞ்சுளா பாஸ்கர். இவர் எம்.சி.சி கல்லூரி வளாகத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வங்கி லாக்கரில் இருந்த பொருட்களை மஞ்சுளா எடுக்க சென்ற போது, திடீரென மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனால், லாக்கர் அறைக்குள் மஞ்சுளா இருப்பது தெரியாமல் அவரை உள்ளே வைத்து காவலாளிகள் பூட்டியுள்ளனர். இதனால் அதிர்சசியடைந்த மஞ்சுளா கணவருக்கு போன் செய்து விவரத்தை கூறி இருக்கிறார். கணவர் வந்த பின்பே மஞ்சுளா மீட்கப்பட்ட நிலையில், இதனை சுட்டிக்காட்டி எள்ளி நகையாடிய வங்கி தரப்பு, மஞ்சுளாவிடம் மன்னிப்பு கேட்வில்லை எனக் கூறப்படுகிறது, இதனால், எரிச்சலடைந்த மஞ்சுளா செங்கல்பட்டு மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் வங்கி நிர்வாகம் அலட்சியமாக செயல்பட்டதாக கூறி தீர்ப்பளித்த நிலையில், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு நஷ்ட ஈடாக 25 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் வழக்கு செலவிற்காக 10 ஆயிரம் பணமும் வழங்க கோரி உத்தரவிட்டது.

Tags:    

மேலும் செய்திகள்