சென்னைக்கு அடித்த எச்சரிக்கை மணி..எதிர்ப்பார்த்தது ஒன்று தலைகிழான ரிசல்ட் - அதிர்ச்சி ரிப்போர்ட்..

Update: 2024-04-25 06:43 GMT

சென்னையில், பல மண்டலங்களில் நிலத்தடி நீர் மட்டம் கடந்த ஆண்டு ஏப்ரல் அளவை விட குறைந்துள்ளது.

சென்னையில் கடந்தாண்டு, வடகிழக்கு பருவமழை வரலாறு காணாத வகையில் கொட்டி தீர்த்தது, முன்பு எப்போதும் இல்லாத அளவு 125 செ.மீ மேல் மழை பொழிவு பதிவானது.

இதனால் சென்னையின் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயர்ந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மெட்ரோ வாட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ள நிலத்தடி நீர் மட்டம் தொடர்பான தரவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த தரவுகளின் படி, சென்னையில் மொத்தம் உள்ள 15 மண்டலங்களில் உள்ள நிலத்தடி நீர்மட்டத்தின் தற்போதை அளவு, கடந்த ஆண்டு ஏப்ரல் மாத அளவுடன் ஒப்பிடுகையில் 8 மண்டலங்களில் மட்டுமே அதிகரித்துள்ளது. எஞ்சியுள்ள 7 மண்டலங்களில் சரிவை சந்தித்துள்ளது.

அந்த வகையில், திருவொற்றியூர் பகுதியில் நிலத்தடி நீர் மட்டம், 2023 ஏப்ரலில் 12.17 அடியாக இருந்து, 2024 ஏப்ரலில் 10.95 அடியாக, 1.22 அடி உயர்ந்துள்ளது.

மணலி பகுதியில் நிலத்தடி நீர் மட்டம், 2023 ஏப்ரலில் 12.36 அடியாக இருந்து, 2024 ஏப்ரலில் 12.25 அடியாக, 0.11 அடி உயர்ந்துள்ளது.

மாதவரம் பகுதியில் 2023 ஏப்ரலில் 27.55 அடியாக இருந்த நிலத்தடி நீர்மட்டம் 2024 ஏப்ரலில் 30.41 அடியாக, 2.86 அடி குறைந்துள்ளது.

தண்டையார்பேட்டை பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் 2023 ஏப்ரலில் 13.54 அடியாக இருந்து, 2024 ஏப்ரலில் 11.84 அடியாக, 1.7 அடி உயர்ந்துள்ளது.

ராயபுரம் பகுதியில் 2023 ஏப்ரலில் 22.67 அடியாக இருந்த நிலத்தடி நீர் மட்டம், 2024 ஏப்ரலில் 24.01 அடியாக, 1.34 அடி குறைந்துள்ளது.

திரு.வி.க நகர் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம், 2023 ஏப்ரலில் 26.24 அடியாக இருந்து, 2024 ஏப்ரலில் 23.09 அடியாக, 3.15 அடி உயர்ந்துள்ளது

அம்பத்தூர் பகுதியில் 2023 ஏப்ரலில் 21.71 அடியாக இருந்த நிலத்தடி நீர் மட்டம் 2024 ஏப்ரலில் 23.65 அடியாக, 1.94 அடி குறைந்துள்ளது.

அண்ணா நகர் பகுதியில் 2023 ஏப்ரலில் 13.74 அடியாக இருந்த நிலத்தடி நீர்மட்டம், 2024 ஏப்ரலில் 17.91 அடியாக, 4.17 அடி குறைந்துள்ளது.

தேனாம்பேட்டை பகுதியில் நிலத்தடி நீர் மட்டம், 2023 ஏப்ரலில் 22.50 அடியாக இருந்து, 2024 ஏப்ரலில் 21.42 அடியாக, 1.08 அடி உயர்ந்துள்ளது.

கோடம்பாக்கம் பகுதியில் 2023 ஏப்ரலில் 20.83 அடியாக இருந்த நிலத்தடி நீர் மட்டம், 2024 ஏப்ரலில் 21.25 அடியாக, 0.42 அடி குறைந்துள்ளது.

வளசரவாக்கம் பகுதியில் நிலத்தடி நீர் மட்டம், 2023 ஏப்ரலில் 14.27 அடியாக இருந்து, 2024 ஏப்ரலில் 12.69 அடியாக, 1.௫௮ அடி உயர்ந்துள்ளது.

ஆலந்தூர் பகுதியில் 2023 ஏப்ரலில் 15.94 அடியாக இருந்த நிலத்தடி நீர் மட்டம் 2024 ஏப்ரலில் 17.97 அடியாக, 2.03 அடி குறைந்துள்ளது.

அடையார் பகுதியில் நிலத்தடி நீர் மட்டம், 2023 ஏப்ரலில் 9.90 அடியாக இருந்து, 2024 ஏப்ரலில் 9.61 அடியாக, 0.29 அடி உயர்ந்துள்ளது.

பெருங்குடி பகுதியில் 2023 ஏப்ரலில் 14.37 அடியாக இருந்த நிலத்தடி நீர் மட்டம், 2024 ஏப்ரலில் 14.92 அடியாக, 0.55 அடி குறைந்துள்ளது.

சோழிங்கநல்லூர் பகுதியில் நிலத்தடி நீர் மட்டம், 2023 ஏப்ரலில் 14.43 அடியாக இருந்து, 2024 ஏப்ரலில் 12.76 அடியாக, 1.67 அடி உயர்ந்துள்ளது.

இனி வரும் நாட்களில் மழை நீரை சேமிப்பதில் அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்